”தேர்தலின் பின் மஹிந்த சிறையில் அடைக்கப்படுவார்” - மேர்வின் சில்வா

ஹிந்த ராஜபக்ஷ பதவி மோகத்தை கைவிட்டு தேர்தலிலிருந்து விலகி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலின் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

மேலும் வேட்புமனுத் தாக்கலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவ அதிகாரத்துடன் செயற்பட்டிருந்தால் கட்சி பிளவுபட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதம் மிகவும் நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டதாகும். இதன்மூலம் ஜனாதிபதியின் சாணக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.

வேட்புமனுத்தாக்கலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைத்துவ அதிகாரத்னுடன் செயற்பட்டிறிருந்தால் இந்தக் கட்சிய பிளவு பட்டிருக்கும். கட்சி மீது ஆதரவு இருந்தமையால்தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இடமளித்தார் என அவரே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தியது மஹிந்தவின் ஆட்சியாகும். என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தியுடன் செயற்பட்டதால் கட்சி பாதுகாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -