இன்று இரவு கண்டி ஓக்றீஜன் ஹோட்டலில் நடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினர்களுக்கான சந்திப்பு தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
குறிப்பிட்ட கூட்டத்தின் போது அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்ததன் காரணமாக அதன் வெற்றிடத்திற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சவூதி அரேபிய தூதரக பொதுஜன அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் ஒருமித்த கோரிக்கையின் பேரில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது ஐ.எல்.எம்.மாஹீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்து கொள்ளும் முகமாக கிழக்கு மாகாணசபை ஆளுணருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண ச்பை உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹீர் நியமிக்கப்படுவது மாத்திரமல்லாமல் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டவர்களின் தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ளவரும் குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் மாஹீர் என்பதும் குறிப்பிடத்தக்கது.