கடந்த எட்டாம் திகதி புதுக்கடையில் நடந்தது என்ன? பைரூஸ் ஹாஜி


செய்தி- ஊடகப் பேச்சாளர் அப்துர் ரஃமான், அஹமட் இர்ஷாட்-
டந்த 8 ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் மீது பி.ப. 3 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சி மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் குண்டர்கள் தாக்குதல் நடாத்தினர்  எனும் சித்தரிக்கப்பட்ட போலியான செய்தி அறிக்கைகள் சில சமூக வலைதளங்களிலும் செய்தி வலைதளங்களிலும் திட்டமிடப்பட்ட வகையில் பறப்பப்ட்டு வருகின்றன - முதலில் இலங்கையின் வளர்ந்து வரும்  ஊடக பன்முகத்தன்மை பற்றி நான் கவலை கொள்கிறேன் -
 நிறுவன கொள்கைகள் ஊடக தர்மம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு எத்தகைய ஆய்வும் இன்றி சம்பவமொன்றை செய்தியாக அறிக்கையிடும் இந்த பண்பு குறித்த ஊடகங்களின் பக்கச்சார்பின்மை  மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்ப வைக்கிறது. 
சம்பவங்கள் எல்லாம் செய்தியல்ல சம்பவங்களின் அறிக்கையே செய்தி. எனவே சம்பவமொன்றை செய்தியாக அறிக்கையிடும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கவியல் கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி  சிந்தித்தல் ஒரு பண்புமிக்க - சமூக பொறுப்பு வாய்ந்த -ஒரு ஊடகத்துக்கு அவசியமாகிறது. 
ஐக்கிய தேசியக் கட்சி மேல்மாகாண சபை உறுப்பினர் மற்றும்  மத்திய கொழும்பு அமைப்பாளர்  பைரூஸ் ஹாஜியார் அவர்களுக்கு எதிராக ஓர் குறுகிய  அரசியல் நோக்கத்தில் பிரசாரமாக செய்யப்படுகின்ற இந்த செய்தி தொடர்பாக -
 பைரூஸ் ஹாஜியார் அவர்களின் மத்திய கொழும்பின்  ஊடக பேச்சாளர் அப்துல்  ரஹுமான் ஆகிய நான் ஒரு சிறந்த தலைவர் பற்றி போலியாக  உருவாக்கபட்ட குறித்த செய்திக்கு மறுப்பு அறிக்கை ஒன்றை வழங்க கடமை பட்டுள்ளேன்.
 கடந்த 8 ஆம் திகதி சகோதரர் முஜீபுா் றஹ்மானின் 300 க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் புதுக்கடை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டு இருந்தார்கள் . தேர்தல் சட்டத்துக்கமைய தேர்தல் காலங்களிலே 25இக்கு  மேற்பட்ட நபர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது தேர்தல் விதியை மீறும் குற்றமாகும் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
 அது மட்டுமன்றி வேட்பாளர் வீட்டுக்கு வீடு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் வகையில் மத்திய கொழும்பின் வேட்பாளர் சகோதரர்  முஜிபுர் ரஹ்மான்  உட்பட அவரது ஆதரவாளர்கள் எமது காரியாலயத்தை கடந்து போகும் போது - அவருடைய ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் கோசம் எழுப்பினர் - அப்போது மத்திய கொழும்பின் முகாமையாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்  அஸ்லாம் அலாவுதீன் உட்பட நான்கே  நான்கு ஆதரவாளர்களே பைரூஸ்  ஹாஜியாரோடு இருந்தார்கள் - அனைவரும் மதிய உணவு உட் கொண்ட வண்ணம்  இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 முஜிபுர் ரஹ்மானின் 300 இக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் பைரூஸ் ஹாஜியாரின் காரியாலயத்துள் அத்து மீறி நுழைய முற்பட்டனர்.  அந்த வேளையில் அங்கே காவலுக்கு இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர் –
 குறித்த இந்த செய்தி தொடர்பான எமது காரியாலத்தில் பொருத்தபட்டுள்ள சீ.சீ. டீவியில்  பதிவான காணொளி பதிவுகளையும் இந்த மறுப்பு செய்தி அறிக்கையோடு இணைத்து அனுபியுள்ளோம் -
 பைரூஸ்  ஹாஜியார் உடனடியாக காரியாலயத்தை விட்டு வெளியே வந்து நடந்தவற்றை கேட்கவே  - முஜிபுர் ஹ்மானின்  ஆதரவாளர்கள் இவ்வாறு தகாதவார்த்தைகள்   பைரூஸ்  ஹாஜி பற்றி கூக்குரல் எழுப்பிக்கொண்டு காரியலத்துள் பலாத்தகாரமாக நுழைய முற்பட்டதாகவும் - அதில் சில இளைஞர்கள்  குடி போதையில் இருந்ததாகவும் - நாங்கள் புதுக்கடையில் எங்கள் பிரசாரத்தை செய்தோம் -முடிந்தால் மாளிகாவத்தையில் செய் பார்க்கலாம் என்று அடாவடித்தனமாக சவால் விட்டு சென்றதாகவும் நிலைமை நேரடியாக முகம் கொடுத்த எமது ஆதரவாளர்கள் பைரூஸ்  ஹாஜியிடம் முறையிட்டனர்.
 பின்பு குறித்த சம்பவம் தொடர்பில் பைரூஸ்  ஹாஜியார் வாழைத்தோட்ட போலீஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்தார்.  பின்பு அங்கிருந்த முஜிபுர் ரஹ்மானின் ஒரு சில ஆதரவாளர்கள் காரியாலயத்தை நோக்கி கூச்சல் எழுப்பினர் - இதன் விளைவாக வாழைத்தோட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த போது போலீசார் முன்னிலையிலேயே முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் - கற்களினாலும் - கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் இதனால்  பைரூஸ் ஹாஜியாரின் வாகனங்கள் மற்றும் காரியாலயம் பலத்த சேதமடைந்தன 
 இதன் போது பொலிசார் நிலைமையை கட்டுபடுத்த வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பின்னர் அதிரடி படையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு எமது காரியாலயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது 
 இதுவே கடந்த 8 ஆம் திகதி நடந்த உண்மை சம்பவம் - இதில் எந்த வித திரிவு படுத்தல்களும் இல்லை-  அதற்குரிய அவசியமும் எமக்கு இல்லை - உயரிய கொள்கையோடு கறைபடியாத கரங்களோடு ஒரு இலட்சிய வேட்கையோடு மக்கள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்து வருபவர் தான் எமது மதிபிட்கும் அன்பிற்கும் உரிய எமது பைரூஸ் ஹாஜியார்  அவர்கள் -
 இந்த சம்பவம் தொடர்பில் சகோதரர்  முஜிபுர் ரஹ்மான் அவர்களால்   ஊடகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அனைத்து அறிகையிடல்களும் முற்றிலும் திட்டமிடப்பட்டு - பைரூஸ் ஹாஜியார் அவர்களின் மக்கள்  செல்வாக்கை -  சமூக அந்தஸ்தை அஸ்தமிக்க செய்யும் வகையில் வெளியிடப்பட்டவை என்பதை நாம் சக இஸ்லாமிய சமூக தோழர்கள் என்ற வகையிலும் - ஒரே கட்சியின் சக உறுப்பினர் என்ற வகையிலும் மன வருத்ததோடு இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.
 இந்த சம்பவம் தொடர்பில்  பைரூஸ் ஹாஜி அவர்கள்  பாரபட்சமற்ற இரு தரப்பு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் படி  போலீசாரிடம் கேட்டுகொண்டார். குறித்த சம்பவத்தின் போது  முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தரப்பில் அறிக்கையிட பட்ட நான்கு பெண்கள் பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்கள் எனும் செய்தியை நாம் முற்றாக மறுப்பத்தோடு - ஆழ்ந்த ஆதங்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்-
 மேலும் பைரூஸ் ஹாஜியார் அவர்கள் தெரிவித்ததாவது –
 இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது - இந்த சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் கோட்டே பொலிசாரால் முன் எடுக்க படுகிறது. தனக்கு இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு வழங்கப்பட வில்லை எனும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சகோதரர்  முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதன் தொடர்பில் ஏற்பட்ட பொறாமை உணர்ச்சியின் காரணமாக -  பைரூஸ் ஹாஜியார் இவ்வாறு நடந்து கொள்வதாக சகோதரர்  முஜிபுர் ரஹ்மான் அவர்கள் மற்றும் அவர் சார் தரப்பினரின் குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்படுகிறது.
 நிஜம் என்னவென அல்லாஹா நிச்சயம் புரிய வைப்பான் - கடந்த 35 வருட காலமாய் மக்கள் சேவை நிமித்தம் நான் அரசியலில் ஈடுபடுவது என்னை படைத்தவன் மீது கொண்ட ஈமானில் மாத்திரமே !
 இதைப்பற்றி விரிவான அறிக்கைகளை நான் ஊடகங்களுக்கு வழங்க விரும்பவில்லை -  காரணம் தேர்தல் காலங்களில் என்னால் வழங்கபடுகின்ற அறிக்கைகள் சகோதரர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் தேர்தல் முடிவுகளில் பாதகமான பாதிப்புகளை உருவாக்கி விட கூடாது எனும் உயரிய நோக்கில்தான் நான் இயலுமான வரையில் மௌனம் காக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பிலான செய்திகளை வழங்குவதில் நான் சில கட்டுபாடுகளையும் - சுய தணிக்கைகளையும் - கடைப்பிடிப்பதோடு - எனது ஊடக செயலாளருக்கும் அவ்வணமே செயலாற்றும் படி அறிவுறுத்தி உள்ளேன்
 இருந்த போதிலும் -  எனது சுய  கௌரவம் - மக்கள் என்மீது கொண்ட நல்லபிப்ராயம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நான் வாய் திறப்பது சிறந்தது என்ற அடிப்படையில் இந்த அறிக்கை  இடையே எனது நிலைபாட்டை சுருக்கமாய் குறிபிட்டுள்ளேன். 
 பல வலிகளை நான் கடந்தே அரசியலில் நான் பல வழிகளை கண்டேன் - எனினும் நான் என் வாழ்நாளிலே எந்த மனிதனையும் மண்ணிலே போட்டு - அவன் முதுகிலே என் வெற்றி சவாரி  செய்ததில்லை - இதனை எனை படைத்த ரப்பு அறிவான் - 
 எனினும் இந்த சம்பவத்தின் மூலம் என் மீது சேறு பூசி  - அவர் தன் கறைகளை பால் கொண்டு கழுவ முற்படுகிறார் என்பது தான் மனதுக்கு வலி தருகிறது-
எதிரியையும் நேசி என்ற அண்ணல் நபியின் வாழ்வு நெறியை கடைபிடித்து வாழும் கடமை கொண்ட ஒரு உண்மையான இஸ்லாமியனாக இத்தகைய செயல்பாடு சகோதரர் முஜீபுா் றஹ்மான் அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்பது தான் நான் வியக்கும் ஒரு விடயாமாக இருகிறது.
 இஸ்லாமிய கொள்கைகளை மதித்து வாழ்பவன் என்ற வகையில் இளைஞர்களை  எனது சுய தேவைக்காக பலி கிடாக்கள் ஆக்கும் கீழ்தர அரசியல் கலாச்சாரம் என்னிடம் இல்லை - என்னிடம் உயிரை கொடுத்து உழைக்கும் என் தொண்டர்கள் உள்ளார்கள். எப்போதும் குண்டர்கள் இல்லை - இனி மேலும் இருக்க போவதில்லை. எனக்கு துணை அல்லாஹ் மட்டுமே - எனது பலம் மக்கள் சக்தியே. 
என்று  ஐக்கிய தேசியக் கட்சி மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் தெரிவித்ததாக - பைரூஸ் ஹாஜியாரின் ஊடக பேச்சாளர் அப்துல் ரஹுமான் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -