ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைத்து செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகாமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுத் தேர்தலில் பெற்று கொண்ட மக்கள் ஆதரவை மதித்து எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
