குற்றப்புலனாய்வுத் திணக்களத்திற்கு தன்னை வரவழைத்து 2 மணி நேரத்திற்கும் அதிகமாக தன்னிடம் விசாணைகளை மேற்கொண்டதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஒருவருடன் இணைந்து நிறுவனம் ஒன்றின் பணத்தை மேசடி செய்ததாக தனக்கெதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அவர் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தன்மீது சேறுபூசும் நோக்கில் இவ்வாறு பொய்யான முறைப்பாடொன்றை சம்பிக ரணவக்கவே மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்திருந்த போதிலும், தேர்தல் ஆணையாளரின் உத்தரவிற்கிணங்க தேர்தல் முடிந்தபின்னர் இன்று தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
