”என்னுடைய விருப்பு வாக்குகள் விடயத்தில் எனக்கு முழுமையான திருபத்தி இல்லை”- ஹலீம்

செய்தியாளர்- இக்பால் அலி-
ற்போது எண்ணப்பட்ட என்னுடைய விருப்பு விடயத்தில் திருப்பதி இல்லா விட்டாலும் கூட 1110011 என மதிப்பிடக் கூடியளவுக்கு கணிமானளவு வாக்குகளை வழங்கி என்னை வெற்றிபெறச் செய்த அனைத்து இன மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளரும் நல்லாட்சியல் முஸ்லிம் சமயம் காலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சராக விளங்கிய எம்.எச். ஏ. ஹலீம் இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகவியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

இது கண்டி மாவட்ட முஸ்லிம்களுடைய வரலாற்றில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் பெற்ற அதி கூடுதலான விருப்ப வாக்குகள் இவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் எண்ணப்பட்ட என்னுடைய விருப்பு வாக்குகள் விடயத்தில் எனக்கு முழுமையான திருபத்தி இல்லை. ஆயினும். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் எமது தலைவரும் பிரதமாருமான ரனில் விக்கிரமசிங்கவின் செயற்திறனில் முன்னெடுத்துச் செல்லவுள்ள சக்திமிக்க அரசாங்கத்திற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளேன்.

உண்மையிலேயே இம்மாவட்டத்தில் அரசியல் சமூக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் சிறப்புமிக்க நாடாமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனார்.

அந்த வகையில் நல்லாட்சிக்கான நிலையான ஜனநாயகத்தை நோக்கி முன் நகரவுள்ள சக்திமிக்க அரசாங்கத்தில் என்னையும அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்தமைக்கு கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சிங்கள் தமிழ் மக்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -