பொத்துவிலில் சிலை வைப்பு, வாக்களித்த மக்கள் பறிதவிப்பு...!

செய்தியாளர்- பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன்
பொத்துவில் பிரதேச வட்டிவெளியில் அமைந்திருக்கும் அரச காணியில் பெளத்த மற்றும் இந்து சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது இரவோடு இரவாக சிலை வைப்பதற்கான கட்டு கட்டப்பட்டே அங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உகந்தை முருகன் கோவிலுக்குச் சொந்தமானதுதென உரிமை கோரிய கோவில் நிருவாக சபை உறுப்பினர்களால் அக்காணியைச் சுற்றி கம்பி வேலியிடப்பட்டது. 

இதனை பொத்துவில் பிரதேச செயலகத்தின் கவணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதனைத்நதொடர்ந்து காணிக்கான உரிமைப்பத்தை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் முஸர்ரத் அவர்களால் அங்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது. இவ்வாறு இருமுறை அறிவித்தல் ஒட்டப்பட்டு சுமார் 06 மாதங்கள் கடந்த போதும் யாராலும் உரிதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே அவ்வரச காணியில் அத்துமீரி சிலை வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னால் பொத்துவில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அஸீஸ் அவர்களின் காலத்தில் இவ்வரச காணியை பொது மைத்தானமாக்குவதற்காகா மண் நிறப்பப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவில் பிரதேச செயலகத்தின் அறிவித்தலை அவமானப்படுத்தும் வகையில் அரச காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.



செய்தியாளர்- தாஜகான்

சிலையகற்றுவதில் பொத்துவில் பிரதேச செயலாளரின் அறிவு பூர்வமான அணுகுமுறைக்கு மக்கள் பாராட்டுபொத்துவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அருகாமையில் அமைந்துள்ள அரசாங்க காணியினுள் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு சிலைகள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சிலை வைப்பினைத் தொடர்ந்து பொத்துவில் ஊரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலைமையில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் தலைமையில் குறித்த அரசகாணியினுள் அனுமதியற்ற முறையில் சிலைவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டை செய்தனர்.

முறைப்பாட்டை அடுத்து குறித்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு பொத்துவில் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுமதியற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளையும் அங்கு சிலைவைக்க கட்டப்பட்ட கட்டினையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்தை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிலை மற்றும் கட்டுமானம் என்பன அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசாரனை அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்செயற்பாடட்டில் முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்து இன முரண்பாட்டை ஏற்படவிடாமல் அறிவு பூர்வமாக தடுத்த பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களுக்கு பொத்துவில் மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

மேலும்இந்த செயற்பாட்டில் ஒற்றுமையுடன் செயற்பட்ட இளைஞர்கள்இ ஊரின் அரசியல் பிரமுகர்கள்இ அரச அதிகாரிகள்இ பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் வருமுன்னே வாய்கால் இடல் அவசியம் இந்த மைதானத்தின் எல்லை மற்றும் குறித்த புனரமைப்பு பணிகளை ஊரின் நலன் கருதி செயற்படுபவர்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.கடந்த காலங்களில் இவ்வாறான அறிவுபூர்வமான அணுகுமுறை கொண்டிருந்தால் சைத்திய போன்ற விடயங்களையும் தடுத்திருக்கலாம். கருத்து வேறுபாடுகளை துடைத்தெரிந்து ஊரின் நலனில் ஒன்று படுவோம்


செய்தியாளர்- தர்ஜுமில்லத்

பொதுத்தேர்தல் முடிவுகளை அறிந்துகொண்டிருந்த வேளையில் பொத்துவிலில் இரவோடிரவாக சிலை வைப்பு.

பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள “வட்டி” எனும் இடத்திலுள்ள அரச காணியில் 2015.08.17ஆம் திகதி இரவோடிரவாக வைக்கப்பட்ட இரண்டு சிலைகளின் காரணமாக பொத்துவிலில் பதட்டம் நிலவுகிறது. 18ஆம் திகதி செவ்வாய்கிழமை  அதிகாலையில் பிரதான வீதியால் செல்கின்ற பொது மக்கள் வட்டி எனும் இடத்தில் மூன்றடி உயரத்தில் புத்தர் சிலையொன்றும், சரஸ்வதி சிலையொன்றும் அருகருகே வைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்று பொதுமக்கள் ஒன்று கூடிய பின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே இன முறுகல் ஏற்பட்டது.

குறித்த  இடத்துக்கு விஜயம் செய்த பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், பிரதேச சபையின்  முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர்களை அழைத்து உரிமை கோரப்படாத இச்சிலை வைப்பு காரணமாக ஊரில் ஏற்பட்டுள்ள இன முறுகலை ஒரு இனக்கப்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக கூடியிருந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை கலைந்து செல்லுமாறும், ஒரு மனித்தியாளத்துக்குள் ஊரில் சமாதானத்திற்குப் பங்கம் இல்லாத சுமூகமான முடிவொன்றை நீதிமன்றம் மூலம் எடுப்பதாக ஏ.எஸ்.பி.ஜயரட்ன உறுதியளித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -