ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (19.07.2015) காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளரும் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான ULMN.முபீன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் அலி சாஹிர் மௌலானா, 2ம் இலக்க வேட்பாளர் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் கல்குடா தொகுதி வேட்பாளர்களான கணக்காளர் ரியாழ் மற்றும் NFGG வேட்பாளர் கவிஞர் நழீம் உள்ளிட்ட வேட்பாளர்களும் அரசியல் பிரமுகா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
இப்பொதுக்கூட்டத்தில் உலமாக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட SLMC மற்றும் NFGG ஆகியவற்றின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -