முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வசிக்கும் மிரிஹான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான போலி இலக்கமுடைய வெள்ளை வான் ஒன்றினை மிரிஹான பொலிஸார் நேற்று இரவு கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களுடன் நபர்கள் இவ்வானில் இருந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய அவர்களின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
உடனடியாக இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடமும், பாதுகாப்பு செயலாளரிடமும் கேட்டுக்கொள்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளார்.
