மஹிந்த ஆட்சியில் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வந்தன - பெரியசாமி பிரதீபன்

க.கிஷாந்தன்-

டைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெறுமாயின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் வழங்கப்படுமென முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச்செயலாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு காலத்திற்கேற்ற சம்பள உயர்வு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.

ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜக்கிய தேசிய கட்சியினூடனான அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றி முதலாளித்துவ வம்சத்தாருக்கு சாதகமான முடிவிலே தங்கியுள்ளது. இவ் ஜக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்திலேயே தோட்டங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டாலும் சுட்டிக்காட்ட வேண்டியதொன்று.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் ஆட்சியில் தானே உள்ளார். ஏன் சம்பள உயர்வை வழங்க முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எது எப்படியோ ஆகஸ்ட் 18ம் திகதி ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியமைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பாரிய வெற்றி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்கள் இம்முறை ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியது மிக அவசியமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச்செயலாளர் பெரியசாமி பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -