ரணிலுக்காக மஹிந்த பாடல் பாடினார்....!

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில் பாடினர்.

'கைவிலங்கிட்டு என் மகனை கொண்டுபோ

நகங்களுக்குள் ஊசி ஏற்றி 32 வதைகள் கொடு

நவீன உலகத்தை பற்றி சிந்திப்பது தவறா

இப்படிப்பட்ட நாட்டுக்கு நீதிமன்றமும், நீதியரசர்களும் எதற்கு?'

என்ற நான்கு வரிகள் கொண்ட பாடலொன்றை பாடினார். மஹிந்த ராஜபக்ஷ, இந்தப் பாடலைப் பாடி முடித்தவுடன், அங்கிருந்தவர்கள் பெரும் கரகோஷங்களை எழுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -