மைத்திரிக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்த வெள்ளை வான் பொலிஸாரிடம் சிக்கியது....?

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சென்ற வெள்ளை வானே மிரிஹான காவற்துறையினரிடம் அண்மையில் சிக்கியதாக அமைச்சர் எம்.கே.டி.ஏ.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.

தம்புள்ள உதாகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.

மிரிஹான காவற்துறை மைத்தானத்திற்கு அருகில் காவற்துறையினரிடம் வெள்ளை வான் ஒன்று சிக்கியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்தவே அந்த வௌ்ளை வான் வந்திருந்தாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இரண்டு முக்கியஸ்தர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளதுடன் அது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் குணவர்தன குறிறப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -