கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் சாதனை -படங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-

கொழும்பு விசாகா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு INFOV 2015 ICT மற்றும்தொழிநுட்ப தொடரில் பாட ரீதியான கணனி உருவாக்க போட்டியில் அகில இலங்கைரீதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவரான எல்.ஹஸீப் முஹம்மட்இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டி கொழும்பு விசாக்கா கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கணணிப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

வெற்றிபெற்ற இம்மாணவனுக்கான வழிகாட்டலை கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் பணிப்புரையின் பேரிலும் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் அவர்களின் மேற்பார்வையிலும் ICT பாட ஆசிரியரான எம்.ஐ.எம்..பசீல்வழங்கியிருந்தார்.. இப்போட்டியில் முதலாம் இடத்தை கொழும்பு நாலாந்தா கல்லூரிபெற்றுக்கொண்டது .

இப்போட்டியில் தேசிய ரீதியிலும் கிழக்கு மாகாண ரீதியிலும் கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஹஸீப் முஹம்மட் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்று வருகின்றா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -