சத்தார் எம் ஜாவித்-
புத்தளம் உழுக்காப்பள்ளத்தில் இருந்து இளவன் குளமூடாக மன்னாருக்குச் சென்ற சிறிய பட்டா வேன் தடம் புரண்டதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 8பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை (21) சிலாவத்துறை கல்லாத்துப் பாலத்திற்கருகில் மேற்படி வாகனம் திடீரென தலைகீழாக தடம் புரண்டதால் குடும்பஸ்தர்களான ஜனாப் நாகூர்பிச்சை ஜௌபா (63) ஜனாப். சாகுல் ஹமீட் றஜீம் (65), ஜனாப் அப்துல் றசூல் சுஹைல் (41) (ஆசிரியர்- விடத்தல்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் ஜனாஸாக்கள் மன்னார் வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவத்தில் சுமார் 8பேர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் மன்னார் விடத்தல்தீவு மற்றும் பெரியமடுவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாஸாக்களை புத்தளத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
