அக்கரைப்பற்று இலுக்குச்சேனை கிராமத்தின் நீண்ட நாள் தேவையான குடி நீர் பூர்த்தி




நிஸ்மி. அக்கரைப்பற்று-


க்கரைப்பற்று இலுக்குச்சேனை கிராமத்தின் நீண்ட நாள் தேவையான குடி நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மேற் கொண்ட பாரிய முயற்சி வெற்றியளித்துள்ளது.

அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமமான இவ் மீள் குடியேற்றக் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) அக்கரைப்பற்று ஜீம்ஆ பெரிய பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.பி.அப்துல் ஹமீட் தலைமையில் இடம் பெற்றது.

அக்கரைப்பற்று ஜீம்ஆ பெரிய பள்ளி வாயல் மேற் கொண்ட இம் இக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்குத் தேவையான நிதியில் ஒரு பகுதியை அக்கரைப்பற்று ஸக்காத் நிதியம் வழங்கியதோடு, மீதிப் பணம் அக்கரைப்பற்று ஜீம்ஆ பெரிய பள்ளி வாயல் நம்மிக்கையாளர் சபைச் செயலாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான அல்-ஹாஜ் எம்.பி.அப்துல் ஹமீட் அவர்களின் முயற்சியினால் பள்ளி வாயல் ஜமா அத்தார்கள் உட்பட அக்கரைப்பற்றிலுள்ள பொது மக்களிடமிருந்து அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உப. தலைவரும், அக்கரைப்பற்று மாநகர முன்னாள் பிரதி மேயருமான எம்.எம்.எம்.றிஸாம், மற்றும் சபை உறுப்பினர்களான மௌலவி எம்.எம்.உதுமா லெவ்வை, ஏ.எம்.ஜுனைதீன், பேஷ் இமாம் மௌலவி எம.ஐ.இப்றாஹீம், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், அக்கரைப்பற்று ஸக்காத் நிதியத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான அஷ்-ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, பிரதிநிதிகளான எம்.ஐ.றியாஸ், எம்.எம்.எகீன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று அலுவலக நிலையப் பொறுப்பதிகாரி எம்.எல்.ரமீஸ், இலுக்குச்சேனை ஜும்ஆ பள்ளித் தலைவர் எம்.ஏ.அபுத்தாலிப். செயலாளர் ஏ.எம்.ஜெலீல் மற்றும் நிருவாகத்தினர், பாடசாலை அதிபர் எம்.மத்லூப் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு குடிநீரினை வழங்கி வைத்தார்கள்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி வாயல் பேஷ் இமாம் எம்.ஐ.இப்றாஹீம் மௌலவியின் துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து இலுக்குச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல், அல்-ஹ{தா வித்தியாலயம் முதலியவற்றுக்கான குடிநீர் இணைப்பினை அதிதிகள் எல்லோரும் இணைந்து வழங்கி ஆரம்பித்து வைத்த பின்னர் கிராமத்திலுள்ள 29 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை வழங்கினார்கள்.

தொடர்ந்து செயலாளர் எம்.பி.அப்துல் ஹமீட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -