அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்களை சீன ஹேக்கர்ஸ் (தகவல் திருட்டு திருடர்கள்) சேகரித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.
சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உறவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீன ஹேக்கர்ஸ், அந்நாட்டு அரசின் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்கள் திருடப்பட்டதை அமெரிக்காவும் ஒப்புக்கொண்ட நிலையில், உளவுத்துறை(சிஐஏ) தொடர்பான தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என விளக்கம் அளித்தன.
இருப்பினும், சீனாவில் தங்கி அமெரிக்காவுக்கான உளவு வேலை பார்த்துவரும் ரகசிய உளவாளிகள் பற்றிய தகவல்களை சேகரித்திருப்பார்களே என்ற அச்சம் அமெரிக்காவிற்கு எழுந்துள்ளது.
