மலையக அரசியல்வாதிகளுக்கு மலையகத்தில் அமோக வரவேற்பு!

க.கிஷாந்தன்-

திர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மணு 13.07.2015 அன்று நுவரெலியாவில் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்த பின்பு மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்பிடங்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கும் பிரதேசங்களுக்கு சென்றனர். இதன்போது பெருந்திரளான மக்கள் கொண்டனர்.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான்,முத்து சிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோர் தங்களுடைய வேட்புமனுவை கையளித்த பின் அட்டன் பகுதிக்கு விஜயம் செய்த பொது அட்டன் நகரில் அமோக வரவேற்பு இடம்பெற்றது.

அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களான பழனி திகாம்பரம்,வேலுசாமி இராதாகிருஷ்ணன்,மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் வட்டகொடை மடக்கும்புர பகுதிக்கு விஜயம் செய்த போது மடக்கும்பரையில் அமோக வரவேற்பு இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் கே.கே.பியதாஸ அவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் அட்டன் பகுதிக்கு விஜயம் செய்த போது அட்டன் நகரில் அவருக்கு அமோக வரவேற்பு இடம்பெற்றது.

இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரறே்றனர்.

எனினும் இதன்போது பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -