மு.கா,வுடன் நௌசாத் அணி சாம்மாந்துறையில் ஒன்றிணைவதன் அவசியம்!.

பைசால் முகம்மது லெவ்வை -காஷ்பி- 

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் தனித்து நின்று நாடாளுமன்ற  பிரதிநிதி   ஒருவரை  பெற்றுக் கொள்வதற்குரிய  தொகுதியாக  அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறைத் தேர்தல்  தொகுதி விளங்குகின்றது.

தொகுதி முறைமை தேர்தலில்  இலகுவில் நாடாளுமன்ற  பிரதிநிதி   ஒருவரை    பெறுவதற்கு உரித்தான இத்தொகுதி இரு முறை  மாவட்ட பிரதிநித்துவ முறை மையின் பின் தனது பிரதி நிதித்துவத்தினை  இழந்துள்ளது. 

இதனால் நடைபெற உள்ள பொதுத் தேர்தல் அம்மக்களுக்கு முக்கியத்துவமாகக் கொள்ளப்படுகின்றது..

 1989 ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் தான்      மாவட்ட பிரதிநித்துவ முறை அறிமுகப் படுத்தப் பட்டதிரிந்தது. இத்தேர்தலிலே  மு.கா   முதன் முதலாக போட்டியிட்டது.

நீண்ட காலமாக பல கட்சிகளுக்கு தங்களது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அக்கட்சியின் வருகை உணர்வுடன் கூடிய ஆதரவினை வழங்க உந்தப் படுத்தியது. இது கால வரை அரசியல் அதிகாரங்களைப் பெற்று வந்தவர்களை  அவர்களின் அரசியல் பயணத்தினை முடிவுக்கு கொண்டுவரும் அளவிர்கு செல்வாக்குப் பெற்றது.

இதன் போது சம்மாந்துறையினை பிரதிநிதித்துவப் படுத்தி நௌசாத்  அவர்கள் ஐ.தே.கட்சியிலும்,  யூ.எல். எம். முகைதீன் அவர்கள்  மு.கா கட்சியிலும் போட்டியிட்டனர்.

61325 வாக்குகளைப் பெற்ற மு.கா ஒரு ஆசனத்தையும்,62600 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. ஐ.தே. கட்சியில்  போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும்  தெரிவாகவில்லை.

சம்மாந்துறைத் தொகுதியில்  மு.கா  23820 வாக்குகளையும் ஐ.தே.க  6163 வாக்குகளையும் பெற்றன. வெறும் 1275 வாக்குகளால் தேர்தல் மூலமாக கிடைக்கவேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் அம்பாரை மாவட்டதில் இழக்கப் பட்டிருந்தது.முழு அம்பாரை மாவட்டத்திற்குமான  பிரதிநிதியாக தலைவர் அஷ்ரஃப் அவர்கள் காணப்பட்டார்கள்.
இந்நிலையில்  சம்மாந்துறைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலமாக அப்துல் மஜீத்  அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு  இராஜங்க அமைச்சராகவும் பொறுப்பாக்கப் பட்டார்.

1994 ம் ஆண்டு  மு.கா தலைவர் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்ததையடுத்து யு.எல் .எம் முகைதீன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 

1994,2000 ம் 2001 ஆண்டுகளில் நடை பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் முகைதீன் அவர்களும். அன்வர் இஸ்மாயில் அவர்களும்  வெற்றி பெற்றனர்.
12 வது பாராளுமன்றம் சுமார் 2 வருட காலத்திற்குள்  கலைக்கப்பட்டமையினால் இலங்கை மூன்று வருட காலத்திற்குள் மூன்று பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தது. 
2004 ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  அன்வர் இஸ்மாயில் அவர்கள் அதாஉள்ளா  அவர்களுடன் இணைந்து  தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தி  மு.கா கட்சிக்கு எதிராக பிரசாரத்தினை முன்னெடுத்தார்.

இந்நிலையில் சம்மாந்துறைத் தொகுதியில்  நௌசாத் அவர்களும்,மகாண அமைச்சர் மன்சூர் அவர்களும் மு.கா சார்பாக போட்டியிட்டனர்.

அதேவேளை மு.காவின் முக்கியஸ்தர்கள்    அதாஉள்ளா, பேரியல் அஷ்றப் ஆகியோர்களின்  தலைமையில்  இணைந்து கொண்டதனால் அதன் தலைவர் அம்பாரை மாவட்டதில் போட்டியிட   நிர்பந்தத்திற்குள்ளானார். 
அரசியலில் நீண்ட  வரலாற்றுப்  பின்னணியுடன்   நௌசாத் அவர்களும் மு.கா கட்சியின் மூத்த போராளி  மன்சூர் அவர்களும் அன்வர் இஸ்மாயில் அவர்களுடன்  பலப் பரீட்சைக்குரிய களமாக தேர்தல் நிலை அன்று மாறியது.

மு.கா ஏற்கனவே பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்றினை இழந்து சம்மாந்துறைத் தொகுதியில் 17688 வாக்குகளைப் பெற்று தோல்வியினைத் தழுவியது. அன்வர்  இஸ்மாயில்  அவர்கள் ஆதரவளித்த ஐ.ம.சுகூ  19117 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது.. 
நேரடியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை  பெறமுடியாவிட்டாலும் அன்வர் இஸ்மாயில் அவர்கள் தனது அரசியல் செல்வாக்கினால்   பாராளுமன்ற உறுப்புரிமையினை நியமன உறுப்பினர் மூலம் பெற்று வரலாற்றில் இடம் பிடித்தார்.
2007 ம் ஆண்டு அன்வர் இஸ்மாயில் அவர்களின் மரணம்  சம்மாந்துறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை  இழந்த நிலையினை உணர்ந்தது. 

2008 ம் ஆண்டு கிழக்கு மகாண சபை  தேர்தலில் அம்பாரை மாவாட்ட பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட மு.கா தலைவர் அப்பதவியினை இராஜினாமா செய்து திருமலையில் மாகாண சபை வேட்பாளராக   களம் இறங்கியதால் நௌசாத் அவர்கள்  பாராளுமன்ற உறுப்பினரானாரக பதவியேற்றுக் கொண்டார். இதனால் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கனவும், விருப்பும் நிறைவேறியது, நௌசாத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை அம்மக்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. 
 2010 ம் ஆண்டு  பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளின் போது  எதிர்பாராத  விதமாக மு.கா பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் அவர்கள் ஐ.ம.சு.கூ உடன்   சேர்ந்து சம்மாந்துறை தொகுதியில் போட்டியிட முடிவெடுத்ததனால் சம்மாந்துறையில்  மு.கா. ஐ,தே.க உடன் இணைந்து  போட்டியிட்டது.
நௌசாத் அவர்களை    மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று சம்மாந்துறைத் தொகுதி மக்கள் 28252 வாக்குகளை  கொடுத்தனர். மு.கா, ஐ.தே கட்சியுடன் சேர்ந்து 10184 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதிகப்படியான வாக்குகளை அம்மக்கள் வழங்கியும் நௌஸாத் அவர்களை பாராளுமன்ற அனுப்ப முடியாமலே போய்விட்டது . ஐ.ம.சு. கூ போட்யிட்ட அதாஉள்ளாஹ் அவர்கள் மாத்திரமே முஸ்லிம்கள் சார்பாக வெற்றியீட்டிக் கொண்டார். ஏனைய 3 உறுப்புரிமையும் சகோதர இனத்தவர்களுக்கே கிடைத்தது.
1994 ம் ஆண்டு   யூ.எல்,எம்,முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்பத்தினைப் போல்    2008 ம் ஆண்டு    நௌசாத் அவர்களுக்கும் கிடைத்தது . அவர் மு.கா வில் தொடர்ந்திருப்பாரேயானால்  நடைபெற்ற தேர்தலில் சம்மாந்துறைக்கான   உறுப்புருமை முதன்மை நிலையில் உறுதிப் படுத்தப்பட்டிருக்கும்.

சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதியினை    பெற்றுக்  கொள்வதற்காக   சில மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன.  
1989 ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில்  மு,கா வினை எதிர்து பலர் களம் இறங்கினாலும் பாராளுமன்றம் செல்லவில்லை. 
பெரும்பான்மை கட்சிகளுடன் நேரடியாக ஒருவர் அங்கு தேர்தலை சந்தித்தல் என்ற  கருத்துக்கூட விகிதாசர பிரதிநிதித்துவ தேர்தலில் அதற்கான வாய்ப்பு குறைவே..

1989 ம் ,2010 ம் ஆண்டின் தேர்தல்களில் நௌசாத் அவர்கள்   வெற்றி பெற முடியாமையும்,குறிப்பாக 2010 ம் ஆண்டு ஐ. ம. சு. கூ .கட்சிக்கு   28252 வாக்குகளை பெற்றுக் கொடுத்த பொழுதிலும் பாராளுமன்ற கனவு பறிக்கப்பட்டதையும்   குறிப்பிடலாம்.

இவ்விரு தேர்தல்களிலும் நௌசாத் அவர்களை நன்றாக  இரு கட்சிகளும் பயன்படுதித்தி   6 சகோதர இனத்தவர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பினை  பெற்றுக்கொண்டன.

சுயேட்ச்சை  குழுவாக    போட்டியிடல்.  இக்கருத்து   எந்தளவு சாத்தியம் என்பதை                   வரலாற்றில் இருந்தே பார்கலாம்.
சுயேட்சை அணியினை நிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் கூட சம்மாந்துறைக்குண்டு.

12 வது பாராளுமன்றத்தில் நௌஸாத் அவர்கள்  முயல் சின்னத்தில் போட்யிட்டு முழு மாவட்டத்திலும் 14808 வாக்குகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.

புதிய முகங்களை  புதிய முஸ்லிம்  அணியில்  களம் இறக்கினால் கூட அம்மக்கள் இலகுவில் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.. 

முஸ்லிம் அடையாளத்துடன்  அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட இருக்கும்  கட்சிகள் புதியவர்களை   சேர்து  போட்டியிட்டாலும்  அவர்களால் வாக்குகளின் சம நிலையினை மாத்திரம்  பாதிக்கச்  செய்ய மடயும் .
  
மு.கா, நௌசாத் அவர்களுக்கான ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகள்  என மூன்று பிரிவாக  அரசியல் கள நிலைவரங்களை  காணலாம்.
இதில் மு.கா விற்கும், நௌசாத் அவர்களு குமிடையே    போட்டி    அதிகம் .

2004 ம் ஆண்டு  நௌசாத் அவர்களும்  மு.கா  வும் சேர்ந்து பொதுத் தேர்தலை சந்தித்த பொழுது அன்வர் இஸ்மாயில் அவர்களின் வெளியேற்றம் வெற்றிக்குத்  தடையாக அமைந்தது படிப்பினையாகும்.
ஏனைய கட்சிகள்  எதிர்து நின்ற பொழுதிலும்  அவர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளால் அவர்களை சார்ந்து நிற்பவர்களின் வெற்றிக்கு  வாய்பாகும்.

இங்கு போட்டி நிலவுகின்ற மு.கா வினையும், நௌசாத்  அவர்களயுமே  ஆய்வுப் பொருளாக கொள்ள வேண்டியுள்ளது, 
2004,2010 கால  பாராளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் கட்சி ரீதியாக  மு.கா தோல்வியைத் தழுவி உள்ள அதே வேளை.2010 ம் ஆண்டின் தேர்தலில் நௌசாத் அவர்கள்  கூடுதலான வாக்குகளைப் பெற்றும் வெற்றி பெறவில்லை. 

2011 ம் ஆண்டு நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் நௌசாத் அவர்கள்      12358 வாக்குகளையும்,மு.கா 10078 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. மு.கா வினால் பிரதேச சபையினை கைபற்ற  முடியாவிட்டாலும் 10000 வாக்குகளைப் பெற்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் தனக்கான ஆதரவினைத் தக்கவைத்துள்ளது. 
2012 ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மு.கா 25611 வாக்குகளையும்,நௌசாத் அவர்கள்  , தே.கா உடன் இணைந்து  12610 வாக்குகளையே பெற்றுக் கொண்டார்.

இம்மூன்று  பெறுபேறுகளின் அடிப்படையில் கள நிலைவரத்தினை அவதானிக்கலாம்.

மாகாண சபைத் தேர்தலில் கூடுதலாக மக்கள்  மு.கா கட்சிக்கு ஆதரவு அளித்தாலும்  பிரதேச சபைத்தேர்தலில் நௌசாத் அவர்கள்      பெற்ற   வாக்கின் சமநிலையினை பாதுகாத்தார். 

இதனை கவனதிற்கொண்டு பார்கும் போது  சம்மாந்துறைத்  தொகுதியில் மு.கா உட்கட்சி முரண்பாட்டினால்  பிளவு படாத நிலையில், நௌசாத் அவர்கள்      சம்மாந்துறை தொகுதியினதும் மற்றும் அக்கிராமத்தின் அபிவிருத்தியையும் கவனத்திற் கொண்டு   மு.கா விற்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் சம்மாந்துறையின்   பிரதிநித்துவம் முதன்மைப்படுத்தப் பட்ட அடிப்படையில் பாதுகாக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு இன்ஷா அல்லாஹ்........

நௌசாத் அவர்கள் இவ்வாறான முடிவினை எடுக்காது அவர் ஏனைய கட்சிகளுக்கோ அல்லது அவர்  தனித்து   போட்யிட்டாலோ  அல்லது புதிய கட்சிகளை ஆதரித்து நின்றாலோ சம்மாந்துறையின் வெற்றிக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரலாம் ....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -