இளைஞர்களை புதிய உலகத்துடன் இணைந்து கொள்ள புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக இளைய தலைமுறையினருக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் மூலம் இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.
அதேபோல் வெளிநாடு சென்று கல்வி கற்க விருப்பும் பிள்ளைகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க தேவையான பணம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
