அ.இ.ம.கா கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் சாய்ந்தமருதில் திறந்து வைப்பு!

அஸ்ஹர் இப்றாஹிம்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் இன்று காலை ( 25 ) திறந்து வைக்கப்பட்டது. 

கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வை கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் ஒழுங்கு செய்திருந்தார்.

இதன் போது பெரும் திரளான ஆதரவாளர்களால் வரவேற்பளிக்க்பட்டு பொல்லடியுடன் வருகை தந்த அமைச்சருடன் வேட்பாளர்களான சிராஸ் மீராசாஹிப் , எம்.எஸ்.அமீர் அலி , எஸ்.எஸ்.பி.மஜீட் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் , கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் ஆகியோரும் ஏனைய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -