ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரை அடங்கிய புத்தகம் பிரசுரிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி இந்த உரையில் கூறப்பட்ட விடயங்கள் புத்தக வடிவில் அரச அச்சகத்தில் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தை பிரசுரிக் வேண்டாம் எனவும் அச்சிடும் பணிகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
அரச அச்சகக் கூட்டத்தாபன ஆணையாளர் காமினி பொன்சேகாவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் இந்த நூலை வெளியிடுமாறு கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இது குறித்து தேர்தல் ஆணையாளரிடம் மற்றுமொரு தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் இந்த நூல் விநியோகம் செய்யப்படுவதனால் ஒரு தரப்புக்கு அநீதி இழைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் நூல் பிரசுரம் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
