பைசால் முகம்மது லெப்பை -காஷ்பி-
1979 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய யாப்பின் பிரகாரம் தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குகளுக்கேர்ப தேசிய ரீதியாக கவனத்திர்கொண்டு நியமன பாராளுமன்ற உறுப்பினர் முறைமை அமுலில் உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் நேரடியாக களம் காண விரும்பாத கல்விமான்களையும் , துறைசார் நிபுணத்துவம் உள்ளவர்களையும் பாராளுமன்ற பிரதிநிதியாக்கி அவர்கள் மூலம் உயர்ந்த பட்ச நன்மைகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடே இந்நியமன முறைமையாகும்.
1989 ம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இத்தெரிவின் மூலம் ஒவ்வொரு கட்சியினரும் தனது பிரமுகர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்.
பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படுத்தப்படும் கூட்டணிகள் மூலமாக சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து இவ்வுறுப்புருமையினை பெறுக்கொள்வதற்கான வியூகத்தினை அமைத்து நன்மை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் போது சிலபோது கட்சிகள் தனது சின்னத்தினை இழந்து பெரிய கட்சியின் சின்னத்துடன் அல்லது கூட்டணி சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடுவது வழக்கமாக உள்ளது.
தேர்தலில் வெற்றி பெறும் போது தமது கூட்டின் வியூகமே வெற்றிக்கு காரணம் என சிறிய கட்சிகள் தலைநிமிர்ந்து பேசுவதுடன் தங்களது கட்சிக்கான நியமன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினையும் பெறுவர்.
மாற்றமாக தோல்வி அடைத்து விட்டால் கட்சியினை காட்டிக் கொடுத்து, சோரம் போய் விட்டனர் என கோசம் இட்டு அடுத்த தேர்தல் வரை மக்கள் மத்தியில் குறித்த கட்சியின் செல்வாக்கினை குறைக்கும் நடவடிக்கைகளில் எதிர்தரப்பினர் ஈடுபடுவர்.
இந்த வகையில் இலங்கையில் பல கல்விமான்கள் தேசியபட்டியல் மூலமான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்று பாராளுமன்றத்தினை தங்களது ஆற்றலால் அலங்கரித்து உள்ளனர்.
கே,என் சொக்சி,பேராசிரியர்களான விசுவர்ணபால ,ஜீ.எல்.பீரிஸ்.மற்றும் திலக்மாரப்பன, கலாநிதி நீலம் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ரஊப் ஹகீம் போன்றோர்களை உதாரணமாகக் கூறலாம்..
இவர்களது இயங்கு தன்மை குறிப்பிட்ட கட்சிக்கு செல் வாக்கினை சேர்த்ததுடன் நாட்டிற்கும் சிறந்த பிரதி பலங்களையும் பெற்றுக் கொடுத்ததை வரலாற்றில் காணலாம்.
இத்தொடரில் மு.கா கட்சி தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநித்தித்துவம் மூலமாக தனக்கும் சமூகத்திற்கும் பெற்றுக்கொடுத்த நன்மைகளை பற்றி பார்க்க முடியும்
1989 ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையில் தனித்தும் கூட்டு சேர்ந்தும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள இக்கட்சி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அட்டாளைச்சேனை .நிந்ததவூர். சாய்ந்தமருது, மருதமுனை,மற்றும் ஏறாவூர் ,கிண்ணியா புத்தளம், குர்னாகல், கொழும்பு இகழுத்துறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் பரவலாக தேவையின் நிமிர்தம் தான் விரும்பிய வர்களுக்கு சந்தர்பதினை வழங்கியுள்ளதை அவதானிக்கலாம்.
வட கிழகிற்கு அப்பால் 08 உறுப்பினர்களும் கிழக்கு பகுதியில் 10 உறுப்பினர்களும் அங்கம் பெற்றுள்ள அதேவேளை அதன் பொச் செயலாளர் ஹசன் அலி அவர்களும், தாவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களும் முறையே இரண்டு , மூன்று தடவைகள் தொடராக மு.கா மூலம் நியமன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மு.கா வழங்கிய பெரும்பாலான நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் செயற்பாடுகளில் நேரடியாக பங்கு கொண்டவர்களே...
2004 ம் ஆண்டே மு .கா அதிகமான நியமன பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. ஐ தே கட்சியுடன் செய்து கொண்ட உடன் படிக்கையின் பிரகாரம் 4 உறுப்புருமை கிடைக்கப் பெற்றமை மு .கா வின் செல்வாக்கினை காட்டுகின்றது. இந்நியமன உறுப்பினர்கள் கட்சிக்கும் சமூகத்திற்கும் செய்த பங்களிப்பு என்ன?
2000 ம் ஆண்டு முதல் நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் கட்சிக்கு கழுத்தறுப்பு செய்துவிட்டு மாற்று அணியுடன் சேர்ந்து அகட்சியினை எதிர்க்கும் படலத்தினை ஆரம்பித்துள்ளனர்..
2004 ம் ஆண்டு சகோதரர் ஹுசையின் பயிலா அவர்கள் யாருக்குமே தெரியாமல் அரச தரப்புடன் ஓடிச் சென்றார். புத்தளம் பாயிஸ் அவர்கள் எதிர்பின் வடிவமாக இருந்து கொண்டு மு.கா கட்சியுடன் முரண்பட்டிருக்கும் குழுவிர்க்கு உதவியாகவே இருந்தார்.
நிஜாமுடீன் மூத்த போராளியாக இருந்தும் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க முடியாமல் முரண்பட்டு அம்பாரையினை விட்டும் வேறு மாவட்டம் நோக்கி ஓடினார்.
பேரியல் அஷ்ரெப், அதாஉள்ளாஹ்,அமைச்சர் ரிசாத் பதிஉத்தீன் ஆகியோர்களின் பிரிவில் நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் அள்ளுண்டு போயினர். மட்டுமல்ல அவர்களை வலுப்படுத்திய பெருமையும் அவர்களயே சாரும்.
இந்நியமன உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அக்கட்சியினை அழிக்கும் கைங்கரியதுக்கே துணை நின்றுள்ளதை பார்க்கலாம். தெரிவு செயப்பட்ட உறுப்பினர்கள் கட்சிக்கு மாறு செய்த போது நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினை காத்த வரலாறும் உண்டு.
சமூக ரீதியான செயற்பாடுகளில் இவர்களின் குரல்கள் ஒலித்தமை குறைவுதான், பாராளுமன்றத்தில் கூட சிலரைத்தவிர தனது ஆற்றலை வெளிப்படுதியவர்களை காண்பது அரிது. அன்று அமைச்சர் றஊப் ஹகீம் அவர்கள் குழுக்களின் பிரதி தலைவராக இருந்து பணியாற்றிவாறு பிற்பட்ட காலங்களில் பொறுப்பாக்கப்பட்ட நியமன பாராளுமன்ற உறுப்பினர்களின் இயங்கு தன்மையினை பாராளுமன்றத்தில் காணமுடியவில்லை.
இன்று மு.கா தலைவரிடம் பலர் தங்களது கிராமம் சார்பாக இவ்வுறுப்புருமையினை கோரி அவரது வார்தையினை நம்பி கைகோர்து நிற்கின்றனர். கடந்த காலங்களில் மு. கா எவ்வாறானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்கப்பட்டதோ அதனை அது கவனத்தில் எடுத்தமை மிகக்குறைவே.
கட்சியின் பிரமுகர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வழங்கப்பட்டமையும், தெரிவுப்பிரதிநிதி இருக்கத்தக்க நிலையில் நியமன பாராளுமன்ற உறுப்பினர்களை வழங்கியமையும் இன்று வரையுள்ள விமர்சனமாகவே இருக்கின்றது.
இந்நிலையில் மு.கா ஏற்கனே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலமை தொடராக்கூடியே சாத்தியம் இம்முறையும் இருப்பதாகவே தோன்றுகின்றது .மு.கா இது கால வரை முக்கியதுவபடுத்தி ஈடுபடாத ஒரு துறை இருக்கின்றது அதுவே கல்வி அபிவிருத்தி துறையாகும் .முஸ்லிம் சமூகம் கல்வி அபிவிருதியின்பால் கூடிய கவனத்தினை செலுத்த வேண்டிய முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றது. முஸ்லிம் சிறுவர்களை வளமிக்கவர்களாக மாற்றும் பல பணிகள் வெற்றிடமாககே உள்ளது.,
குறிப்பிட்ட அரச , தனியார் நிறுவனங்கள் இப்பணியினை தொடர்ந்தாலும் அரசியல் ரீதியான பங்களிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. இதனை கவனதிர்கொண்டு பொருத்தமான கல்விமான் ஒருவரையாவது பாராளுமன்றம் அனுப்பி இச்சமூகத்தின் கல்வி விருதிக்கான திட்டத்துடன் செயற்பட மு.க உதவி புரிதல் அவசியம்.
எதிர் காலத்தில் வரப்போகும் தேர்தல்கள் தலைகீழாக மாற்றப்படும் நோக்கம் இருக்கும் நிலையில் மு.க இது பற்றி சிந்தித்தல் நன்று. மு.க இன்று அகப்பட்டுள்ள பொறியில் இருந்து விடிவு பெறுவதற்கு இதனை ஒரு சந்தர்பமாக பயன்படுத்துவதால் அதன் நல்லவிபிராயம் மக்கள் மத்தியில் உயரும்.
வெறுமனே மாவட்ட அபிவிருத்தி ஒதுகீடுகளை பிரித்துக் கொடுத்து விட்டு தானும் ஒரு 'எம்பி' என்று இருப்பவர்களுக்கோ, அல்லது மு.க எதைக் கொடுத்தாலும் அது எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கோ கொடுத்து வெறும் பாதை விஸ்த்தரிப்புக்கும் இமின்சார கம்பங்களை நடுவதற்கும், சில கட்டங்களை கட்டுவதற்கும் என்ற நிலை தொடருமேயானால் முஸ்லிம் என்ற வார்த்தையினை அக்கட்சி சுமந்து இருப்பதில் அர்தம் இல்லாமல் போய்விடும்.
மேலும் மு. கா தனது கட்சி பிரமுகர்களுக்கு நியமன பாராளுமன்ற உறுப்பினர்களை வழங்கி பின்னர் அவர்கள் கட்சி மாறி அல்லது பெறுமதியான செயற்பாடுகளில் தன்னை அலங்கரிக்காதிருக்கும் உறுப்பினர்களுக்கே தொடர்ந்தும் இந்த நியமன முறை பிரநிதித்துவத்தினை வழங்குமேயானால் அக்கட்சி முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்த வரலாற்றினையும் பதித்துக் கொள்ளும்.
