இக்பால் அலி-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம்களுடைய ஒற்றுமையை சீர் குலைத்து முஸ்லிம்களுடைய வாக்குகளைச் சின்னாபிண்ணாமாக சிதறடிக்கச் செய்வது என்பது மட்டுமல்ல மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுடைய கனவுகளுக்கு முற்புள்ளி வைத்து அரவது இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என கல்முனைத் தேர்தல் தொகுதியிலுள்ள புத்திஜீவிகள் தரப்ப்பினர் கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில்
களமிறங்கி முழு நாட்டு முஸ்லிம் மக்களுடைய உரிமையைப் பெற்றுக் கொள்ளவும் அபிவிருத்திப் பணிகளை கருத்திற் கொண்டு தூர நோக்குடன் செயற்பட்டவர்.
இந்தப் பகுதி மக்களைப் பொருத்தவரையில் ஏனைய பகுதி மக்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தல் தொகுதி மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்து நீண்ட காலமாக தங்களுடைய அரசியல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கென ஒரு கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இல்லாத மனக்குறையை கவலையுடன் சுமந்து கொண்டு கட்சியின் பற்றுறுதியோடும், அமைச்சர் அஷ்ரப் அவர்களுடைய கனவுகளை நனவுகளாக்க வேண்டும் என்ற உணர்விலும் கட்சியின் தனித்துவம் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உயர்ந்தே நிற்கின்றனர்.
இந்த கட்சியில் எவரைக் கொண்டு நிறுத்தினாலும் கண்ணை முடிக் கொண்டு தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்வதில் போற்றத் தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் புதிதாக இங்கு வருகை தந்து முஸ்லிம் பாராளுமன்றம் பிரதிநித்துவங்களை இல்லாமற் செய்தவற்காக புதிய சதித் திட்டம் தீட்டி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தை மேலும் அனாதாரவான நிலைக்கு பின்தள்ளச் செய்கின்ற செயலையே இந்தப் புதியக் கட்சிக்காரர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய சந்தப்பவாத அரசியலுக்கு இப்பகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய கட்டாயத் தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது.
தங்களுடைய பகுதியில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவர்களே இம்மாவட்டத்திலும் மக்களை குழப்ப முற்படுகின்றனர்.
ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத இங்குள்ள இடத்திற்கு வந்து முஸ்லிம்களுடைய ஒற்றுமையை மேலும் சீர்குலைக்க முற்படுவது என்பது இவர்களுடைய நயவஞ்சகத்தனமான அரசியலை நியாயமுள்ள எந்த மனிதர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே இவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்கள் விழிப்புடன் இருந்தல் வேண்டும் என்பதுடன் தொடர்ந்து இது தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவு படுத்தவுள்ளதாகவும் எனவும் மேலும் இந்த புத்திஜீகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.
