அல் -மிஸ்பா-
பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹபில் நஸிர் அஹமட் அவர்களின் சிறந்ததும் அயராததுமான சேவைகளினால் அபிவிருத்தியில் மழுங்கி கிடந்த கிழக்கு மாகாணம் தலை நிமிர ஆரம்பித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற 20 வருட கால யுத்தத்தினாலும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற அரசியல் பழிவாங்கல்களினால் பல வருடங்களாக இம் மாகாணம் அபிவிருத்தி, கல்வி, நன்நடத்தை, போதை போருள் பாவனை மற்றும் கலாச்சார சீர் கோடு, சூழல் மசடைதல் என்பவற்றோடு கிழக்கு அழிவு எனும் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதன் வேளைதான் இன துவேசங்கள் மற்றும் பிரதேச வாதங்கள் பரப்பப்பட்டு சிலர் தங்களுடைய லாபங்ளையும் சுகபோகங்களையும் அனுபவித்து வந்தனர்.
அப்போதுதான் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் முதலமைச்சர் எனும் பதவி பல போராட்டங்களுக்கு மத்தியில் சிறந்த ஒருவருக்கு வழங்கப்பட்டது.
பல பின்னடைவுகளுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தில் கீழ் படிகளை சுவைத்து வந்த கிழக்கு மண், மிகவும் பெருமதி வாய்ந்த முதலமைச்சு பதவியானது உரியவருக்கு வழங்கப்பட்டதால்தான் இன்று வாழ்வாதாரத்தின் உச்ச நிலைக்கு சென்றிருக்கின்றது.
இன்று கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள்களின் பாவனை குறைக்கப்பட்டு சிறார்களின் கல்வி மற்றும் உயர் கல்வியில் பாறிய வளர்ச்சி கண்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு பாடசாலைகளில் மாணவர்களின் கல்வியில் காணப்பட்ட இருக்கமான நிலை இன்று தவிர்க்கப்ட்டுள்ளது.
இதற்கு காரணம் கிழக்கில் பிறந்த கிழக்கின் தைரியமான முதலமைச்சர் நஸிர் அகமட் அவர்கள் என்றால் மிகையாகாது. இனமத பாகுபாடு பாராமல் சேவை ஆற்றுவதில் மிக சிறந்தவர்.
அனைத்து இன மக்களினதும் தேவைகளைக் கேட்டரிந்து அவர்களின் கலாச்சார மத சடங்குகளுக்க ஏற்ப சரின முறையில் காய் நகர்த்தல்களை செய்து யாரையும் பாதிக்காமல் அனைவருக்கும் சேவை ஆற்றியதனாலேயே இன்று கிழக்கு மண் மத நல்லிணக்கத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இது வரையும் இல்லாத சிறந்த மத நல்லிணக்கத்தை முதன் முதலில் தனது ஆட்சியிலேயே கொண்டுவந்த முதலமைச்சர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
ஹாபிஸ் நஸிர் அகமட் அவர்களின் அர்ப்பண சிந்தனையும் தைரியமான செயலாற்றுகையும்தான் இவ்வாறன அபிவிருத்தியை கிழக்கு மக்கள் சுவைக்கக் காரணமாக அமைந்தது. இவரின் பெறுமை அற்ற தன்மைதான் இவரை மனிதநேயத்தின் அடிமட்டத்துக்கு சென்று மக்களுக்கு சேவை ஆற்ற வைத்தது. ஆணவம் அற்ற அதிகாரமற்ற பேச்சுகளினால் மக்களைக் கவர்ந்த ஒருவர் இவர்.
தொழிலாளிகளிடம் தேள் கொடுத்து தொழிலை ஊக்குவிக்கும் தன்மைதான் இன்று கிழக்கு மண்ணின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. கிழக்கு மக்கள் அனைவரும் சேரந்து இவருக்கு “கிழக்கு புதல்வன், கிழக்கு புத்திரன்” என்ற பதவியை வழங்கினாலும் அவரின் சேவைகளுக்க ஈடாகாது.

