நிந்தவூர் மக்கள் நூற்றுக்கு நூர் மு.காவிற்கு வாக்களிக்கும் ஊர். தவிசாளருக்கும், எனக்கும் சகோதரர் ஹஸன்அலிக்குமிடையே சிறு முரண்பாடு இருக்கின்றது. சென்ற மாகாண சபைத் தேர்தலில் தவிசாளரை நம்பி ஒரு சிலர் தோற்ற சரித்திரங்கள் இருக்கின்றன. சேர்மன் பொதுத் தேர்தலில் எனக்கு வாக்கு வெட்டாது விட்டால் அதன் பிரதிபலனை வருகின்ற பிரதேச சபைத் தேர்தலில் அவர் அனுபவிப்பார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மு.காவின் வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசால் காசிம், ஏ.எம்.மன்சூர் ஆகியோர்கள் இணைந்து சாய்ந்தமருது சீபிரிஸில் (20.07.2015) நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பைசால் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ... VIDEO
