எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனைக்குடி-01 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அப்பிரிவில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள், குர்ஆனை மனனமிட்டு அல்-ஹாபிஸ் பட்டம் பெற்றவர் என பலரை பாராட்டி கௌரவித்தலும், இப்தார் நிகழ்வும் நேற்று (07) மாலை கல்முனை ஆஸாத் பிளாஸாவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு கடந்த 20 வருட காலத்திற்கும் மேலாக சேவை செய்து ஓய்வு பெற்ற கிராம சேவகர்களான ஏ.அப்துல் கபூர், எம்.ரீ.அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஓய்வு பெற்ற கல்விக் கல்லுாரி விரிவுரையாளர் எச்.எம். ஆதம்பாவா, அல்குர்ஆனை மனனமிட்டு அல்-ஹாபிழ் பட்டம் பெற்ற முஹம்மத் அஸ்வர் பின் ஆதம்பாவா, கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.எம்.எம்.எஸ். அஹமட் பாறுாக் மௌலானா ஆகியோர் அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அதுபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிதாக கடமையேற்றுள்ள பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






