ஏ.எஸ்.எம்.தாணீஸ்
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னால் மூதூர் பிரதேச சபை வேட்பாளரும், கட்சியின் மூதூர்பிராந்திய ஏற்பாட்டாளரும், நௌபால்டீன் சமூக சேவை நிறுவனத்தின் தலைவருமான எம்.நௌபால்டீன் நேற்று 06 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக்குடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தெர்தலில் செயற்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை இது தொடர்பான சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றபோது அமைப்பின் செயலாளா எம்.றக்கீப் மற்றும் தலைவர் கையொப்பமிட்ட பத்திரத்தை கையளிப்பதை படத்தில் காணலாம்.

