ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருதுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் கூட்டமும் நேற்;று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எமது கட்சியின் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸனலி, மூத்த துணைத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத், வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.நஸார்தீன், ஏ.எல்.அமீர், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.யஹியாகான், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம்.பாயிஸ், எம்.எச்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், போராளிகளும் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசுக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் காணப்படுகின்றது என்ற மக்கள் காங்கிரசின் பொய்யான பிரச்சாரத்திற்கு மக்கள் மு.காவின் கூட்டத்திற்கு திரண்டு கலந்து கொண்டு தங்களின் ஆதரவின் வழங்கியதன் மூலம் அப்பிரச்சாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் வெற்றிக்காக சாய்ந்தமருது மக்கள் இன்றிலிருந்து செயற்படப் போவதாக உறுதிபூண்டுள்ளனர்.


