மாத்தறை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டால் நாளை காலை கொல்லப்படுவாய்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் ஒப்படைத்து விட்டு திரும்பும் போதே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மாத்தறை மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
