றியாஸ் ஆதம்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பும் பிரச்சாரப் பொதுக் கூட்டமும் நேற்று(26) அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகாமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் வேட்பாளருமான சமீர் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாகவும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.




