சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எல்லாம் வல்ல இறைவனுடைய அருட்
கடாட்சத்தையும் ஆதரவினையும் பாதுகாப்பினையும் பெற்ற மாபெரும்
இயக்கமாகும். எனவேதான கடந்த 30வருடங்களாக இக்கட்சியை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அத்தனை சதிவலைகளையும் தாண்டி
இப்பேரியக்கம் தலைநிமிர்ந்த நிற்கின்றது. இது ஒருசாதாரண அரசியல்
கட்சியல்ல, ஆனால் இச்சமுதாயத்தின் உரிமைக்குரலும் அதன் பாதுகாப்பான
கேடயமுமாகும். ஆகவே இவ்வியக்கத்திற்கு தமது வாக்குப்பலத்தினால் உரமூட்டி ஆக்கமும் ஊக்குமுமளிப்பதுடன் இதனைப்பாதுகாத்து எதிர்காலச் சந்ததிக்கு கையளிக்கவேண்டியது இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய அடிப்படைக் கடமையாகும்.’ இவ்வாறு அட்டாளைச்சேனை
பிரதான வீதியில் அண்மையில் நடைபெற்ற ஜனவெள்ளம் நிறைந்த சி.ல.மு.காங்கிரசின் முதலாவது பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது ஸ்ரீ.மு.காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் பல்பலைக்கழக பதிவாளரும் கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப். எஸ்.எல்.எம்.பழீல்
அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சருமான அல்ஹாஜ். றஊப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொன்ட இக்கூட்டத்தில் ஜனாப். பழீல் தொடர்ந்து உரையாற்றுகையில், இக்கட்சியினை
இஸ்தாபிப்பதற்கு மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் அவர்களினால் போடப்பட்ட அத்திவாரம்
பலமானதும் தூய்மையானதும் இறைவனின் அருளையும் கொண்டதுமாகும். மறைந்த தலைவர்
இவ்வியக்கத்திற்கான சின்னமான மரத்தினை திருக்குர்ஆனின் அடிப்படையிலிருந்தே
தெரிவுசெய்தார் என்ற இரகசியம் பலருக்குத்தெரியாமல் இருக்கலாம். திருக்குர்ஆனின் 14வது
அத்தியாயம் ‘சூறா இப்றாஹிமின்’ 24, 25, 26வது வசனங்கள் நல்லவாக்கியத்தைப் பேசும்
நல்லமனிதர்களுக்கு ஆழ அகலமாக வேரூன்றிய விருட்சமான மரத்தினை உதாரணமாக இறைவன்
எடுத்துக்கூறுகின்றான். அவ்வாறான விருட்சங்கள் இறைவனின் நாட்டப்படி பூத்துக் காய்த்து
கனிகளைத் தந்து கொண்டேயிருக்கும். ஆழப்பதியாமல் மேல்வாரியாக நின்று கொண்டிருக்கும்
மரங்கள் கெட்டவார்த்தைகளைப் பேசுகின்ற கெட்ட மனிதர்களுக் கொப்பானது. அவை
பிரயோசனமற்றவை,நிலையற்றவை என இறைவசனம் எடுத்துக்கூறுகின்றது.
நல்ல சமுதாய சிந்தனையோடு, தூய எண்ணத்தோடு தோற்றுவிக்கப்பட்ட சி.ல.மு.காங்கிரஸ்
இன்றுவரை அழியாமலும் அழிக்கமுடியாமலும் இருப்பதற்கான அடிப்படையினை திருக்குர்ஆனின்
வசனங்கள் எடுத்துக்கூறுகின்றன. மறைந்த தலைவரின் காலத்திலிருந்து எத்தனைபேர் எத்தனை அணிகள்
இக்கட்சியிலிருந்தும் சவால்களுடன் வெளியேறின. இப்பேரியக்கத்தையும் அதன் சின்னத்தையும்
அழிப்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களை அவர்கள் மேற்கொண்டனர். ஆரம்பத்திலிருந்து
சேகு இஸ்ஸதீன், ஹிஸ்புல்லாஹ்,பேரியல் அம்மையார், அதா உல்லா, அன்வர் இஸ்மாயில்,
றிசாத் பதியுதீன், அமீர் அலி, நஜீப் ஏ மஜீட், எஸ் எஸ்.பி.மஜீட் என்று பேரினவாத
கயிறுகளை விழுங்கிக்கொண்டு காலத்துக்குக் காலம் தலைமைத்துவத்தையும் கட்சியையும் ஏன்?.... இந்த
சமுதாயத்தையும் சவாலுக்குட்படுத்தி கோடு வழக்கு என்று சீரழிக்க முயன்றனர். ஏதாவது இவர்களின்
முயற்சிகள் பலித்தனவா?.... இல்லை. அவர்களின் எண்ணங்களும் முயற்சிகளும் பிழையானவை
என்பதுதான் அத்தோல்வி களுக்கான அடிப்படைக்காரணியாகும். தானும் தலைவனாக வேண்டும,;
அதற்கு ஒரு கட்சிவேண்டும் என்றுதான் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
போன்ற வேகமான மாற்றுக்கட்சிகளை உருவாக்கி சமுதாய ஒற்றுமை, ஐக்கியத்தை க்குலைத்து
இக்கட்சியை அழிக்கலாமென நினைத்தனர். சுயநலமும் பெருமையும் கலந்த பட்டம் பதவிகளை
பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற பிழையான அடிப்படைகளின் வெளிப்பாடே இவையாகும். ஆனால்
சமகால சாணக்கியத் தலைவனின் பக்குவமான சாதுரியங்களினால் இறை உதவியோடு அத்தனை சவால்களும்
இன்றுவரைவரையிலும் முறியடிக்கப்பட்டன.
அகதிகளைப் பாதுகாக்கவெண்டுமென வடக்கை மையப்படுத்தி கட்சியமைத்து அவர்களின் செலவில் தன்னை
கொளுக்க வைத்துக்கொண்ட அமைச்சர் றிஷாட் இன்று கிழக்கிலே வந்து திடீரெனக் குதித்து,
சி.ல.மு.காங்கிரஸின் துரோகிகள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தனியாக ஆள்போட்டு
சி.ல.மு.காங்கிரஸின் கோட்டையான அம்பாரை மாவட்டத்தினை குழப்பிக்கொண்டிருப்பது
இஸ்லாத்தித்pன் பார்வையில் கொலை செய்வதைவிட பாவமான செயலாகும். சமுதாயத் தலைவனாவதற்குரிய
பண்பாடு இதுதானா?......இதுபலிக்குமா? என்று கேட்கவிரும்புகின்றேன். 2004ம் ஆண்டிலே
சி.ல.மு.காங்கிரஸின் பாசறையிலே தன்னை வளர்த்துக்கொண்டு ஆpயாகி எமது சமுதாயத்தின்
முதுகிலே குத்திவிட்டு எமதுசமுதாயத்தையும் இவ்வியக்கத்pன் தேசியத்தலைவனையும் அசிங்கமாக
அவமானப்படுத்தி நீங்கள் ஆடிய நாடகம் இந்நாட்டு முஸ்லிம்களின் நெஞ்சங்களிலே
நிலைத்திருக்கும் மாறாத வடுவாகும். அன்றிலிருந்து இன்றுவரையும் அரசாங்கத்தினுள்ளும்
புறமும் இக்கட்சியை அழிப்பதற்காக நீங்கள் அரங்கேற்றிய திருவிளையாடல்கள்
கட்சிப்போராளிகளுக்கு புரியாத ரகசியமல்ல. ஆனால் அல்லாஹ்வின் பாதகாப்பினைப்
பெற்ற இவ்வியக்கம்; தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
நல்லாட்சிக்கான இப்பயணத்தில் இக்கட்சியை அழிக்கநினைத்து தீய எண்ணத்துடன் அணியமைத்தவர்களை,
அதாவுல்லாவிலிருந்து ஹிஸ்புல்லாஹ் வரை அல்லாஹ் ஓரங்கட்டி அழித்துவிடுவதற்கான
உபாயங்கள் அரங்கேறி வருகின்றன. அம்பாரை மாவட்டத்தில் அமைச்சர் றிஸாத்தின்
தீயஎண்ணம் கொண்ட அரசியல் தலைவிதியும் இவ்விலக்கணங்களுக்குட்பட்டதென்பதை ஆகஸ்ட்மாத தேர்தல்
இன்சாஅல்லாஹ் உலகுக்கு பறைசாற்றும்.
