க.கிஷாந்தன்-
நுவெரலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தில் 05.07.2015 அன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த நான்கு ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நான்கு பேரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.