இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மா- ரித்திகா நிச்சயதார்த்தம் மும்பையில் நேற்று முன் தினம் நடந்தது.
ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் விவகாரங்கள் மற்றும் விளம்பரங்களை கவனிக்கும் மேலாளராக ரித்திகா கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
ரித்திகாவுடன் ஆரம்பத்தில் நட்புடன் பழகிய ரோஹித் சர்மாவுக்கு அதுவே நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த மாதம் தனது பிறந்த நாள் தினத்தன்று இருவருக்கும் இடையே உள்ள உறவை டுவிட்டரில் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மும்பை பொரிவலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில், இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் அவரது நண்பர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
அதே போல் பாலிவுட் நடிகர் சொகைல் கான் கலந்து கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை ரித்திகா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.