அஜித் புராணம் பற்றி சமீப காலமாக வராமல் இருந்தது, தற்போது மீண்டும் ஒரு பிரபல இயக்குனர் அஜித்தை புகழ்ந்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை, பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி தான். இவர் நேற்று பாகுபலி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தமிழில் எந்த நடிகரை இயக்க விருப்பம் என்று கேட்டனர்.
அப்போது அவர் ‘நான் மட்டும் இல்லை யாராக இருந்தாலும் முதல் சாய்ஸ் ரஜினிகாந்த் சார் தான், பிறகு சூர்யாவை எனக்கு மிக பிடிக்கும், அஜித்தை நான் 2, 3 தடவை சந்தித்துள்ளேன், அவர் மிகவும் எளிமையான மனிதர்’ என்று கூறியுள்ளார்.
