இளம் மாதர் முஸ்லிம் சங்க சிரேஷ்ட உப தலைவி ஆயிஷா மஹ்ரூப் காலமானார்



இளம் மாதர் முஸ்லிம் சங்க சிரேஷ்ட உப தலைவி ஆயிஷா மஹ்ரூப் 4/6/2015 அன்று காலமானார்!


இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவியான தேசமான்ய ஆயிஷா மஹ்ரூப் 4ஃ6ஃ2015 அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76 . சுமார் ஒரு மாதகாலமாக சுகயீனமுற்று ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார் . 

இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாவார் இளம் மாதர் முஸ்லிம் சங்கம் மட்டுமன்றி பாகிஸ்தான் இலங்கை நட்புறவுச் சங்கம் உட்பட மேலும் பல சங்கங்களில் இணைந்து சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த சமூக சேவையாளராவார்.

அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையையடுத்து தெஹிவளை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது 

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் துணைவியாரான திருமதி ரவூப் ஹக்கீம் மற்றும் இளம் மாதர் முஸ்லிம் சங்க உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் அன்னாரின் ஜனாஸாவில் 
கலந்துக் கொண்டதாக இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தெரிவித்தார்.
தகவல்- 
நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -