எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் நாட்களில் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என தான் நம்புவதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.