நியூஸிலாந்திடம் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள்!

ந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகழிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 

தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும், தமக்கு புகழிடம் வழங்குமாறும் இவர்கள் நியூஸிலாந்து அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

தமக்கு அமைதியான வாழ்வே வேண்டும் என்றும் சில அரசியல் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளாலேயே தாம் சொந்த நாட்டை நீங்கி வந்ததாகவும் மேற்கு தீமோர் - குப்பாங் தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த அகதிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக நியூஸிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

மேலும் இவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும், பெரும் சிரமம் மற்றும் அழுத்தத்திற்கு மத்தியிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இதுவரை உதவி கோரிய எந்தவொரு வேண்டுகோளும் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என நியூஸிலாந்து குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -