ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
மூதூர் பீ.கே.பௌண்டேசன் அமைப்பினரின் ஏற்பாடு செய்யப்பட்ட பெரும் பாராட்டு விழா இன்று 01ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பீ.கே.பௌண்டேசனின் தலைவர் பீ.கே.கலீல் தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளக போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் மற்றும் அல் ஹிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாறூன் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள், ஓய்வு பெற்ற அரசாங்கஉத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பிரஜைகள் உட்பட பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பலர் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





