வெற்றிடம் நிலவும் அளுகோசு (மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழில்) பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் அளுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
அதன்படி அடுத்த வாரமளவில் அளுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்புவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் கூறினார்.
இதற்கு முன்னரும் அளுகோசு பதவிக்கு நபர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் அவர்கள் பின் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.(ந)