தொழுகையின் அற்புதமோ!
இறையச்ச ஒளியின் அமுதமல்லவோ?
கண்ணிய கமழும் திருக்குர்ஆன் இறைவசனமோ
தாஹாநபி மொழிந்த தேன்சுவை மொழிக் கொண்ட பொன்மொழிகளோ நல் வழிகாட்டும் தீன்வழியல்லவோ"?
புண்ணியம் தரும் உலக வழிகாட்டி அல்லவோ"?
சமநிலைக் காண வாழ்க்கையில் சமத்துவம் தழைக்க ஓங்கி நிற்கும் வீர பொக்கிசமோ இஸ்லாம்.....
மாய வாழ்க்கையோ சோதனைக் கூடம்!
அவ்வீரமிகு இஸ்லாத்தின் வித்தாக்க வந்த மானுடபூக்களே நாம்.........!
நாமோ பூலோக சுவாசம் மட்டும் முகர்ந்து வாழ்கிறோம்.......
இறையச்சம் என்ற மறுமைபடியை எட்டிப்பார்பதில்லை!
இறையச்சமோ மாயசோதனையில் மடங்குவதில்லை !
சினிமா என்ற ஒன்றை
தினமும் முத்தமிடும் நாம்
எங்கே செல்கிறது நம் கலாச்சாரம்?
இளமையைத் தொலைத்து
கருவில் உருக்கெடுத்து மனதில் கனம் தந்து முளைவிடும் உயிருக்கு சேதாரம் இல்லாமல்
காக்கின்ற நம் வல்லோனுக்கு என்ன செய்கிறோம்"?
சிந்திப்போம்............
இளநிரைத் தளிர்விட்டபின் மட்டும்
தக்வா என்னும் தென்றலில் அசைந்தாட செய்வோம்!
இறை இல்லம் ஜொலிப்பதில்லை! உணர்வோம்
பருவம் வந்ததும் வரும்
பாசாங்கு என்னத்தை தவிர்த்து
பூத்துக் குலுங்கும் இறையச்சத்தை மிளிரச்செய்வோம்!
தஸ்பிக் சொல் மலர்களை
மறுமையில் பாத்திரமாம்
பூலோக காகிதத்தில்
சுவனத்தின் பூஞ்சோலையில்
மையென்ற கண்ணீர் நிரம்பிய
நம் தலை பேனாவாகி ஸூஜூது என்ற
கையெழுத்தை தினம் தினம் போடட்டும்!
அமல் என்னும் கதிர்
முற்றிய மானுடப்பயிர்களாய்
விளைந்து நிற்போம்.........
