'முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகால கல்வித் தேவைகள்' எனும் தலைப்பில் கல்வியலாளர் அஷ்ஷேக் ரவுப் சைன் (நளீமி) அவர்கள் வழங்கும் சிறப்பு சொற்பொழிவு எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தெஹிவளை ஸ்டேஷன் வீதி Harcourts நிறுவன Darul Ilm மண்டபத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் அஹமட் றியாஸ் தலைமையில் இடம் பெறும்.
இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் கல்வி முன்னற்ற சங்கம் மேற்கொண்டுள்ளதாக அதன் செயலாளர் எஸ்.எம். ஹிஸாம் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வுகளில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கற்பிக்கின்ற போதனாசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றார்கள்.(ந)