முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் எம்.பி. முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க முனைகின்றாரா?

எம்.எஸ்.டீன்-

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. என்றொரு முது மொழிக்குப் பொருத்தமான கதையாக மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் எம்.பி. குளவிக் கூட்டில் கல்லெறிந்தது போன்று அம்பாரை மாவட்டத்தை கையிலெடுத்துள்ளார்.

இவ்வளவு காலமும் மஹிந்தவே சரணம் ஹக்கீமே பலஹீனம் ஐய்யப்பா என்று ஜனாதிபதித் தேர்தல் வரை கட்டுண்டு கிடந்தவர் திடீரென கரையோர மாவட்டம் தர வேண்டுமென்று கோரிக்கை விடுவது ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானமா? அல்லது தவிசாளரின் சுய விருப்பமா? என்ற கேள்விக்கு விடை பகர வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. நான் மஹிந்தவுக்கே ஆதரவளிப்பேன் என்று கருத்தியல் வாதம் புரிந்தவர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள இக் காலகட்டத்தில் வீண் குழப்பங்களை உண்டு பண்ண முற்படுவது நியாயமா? இவ்வாறான கோரிக்கைகளால் ஆக்ரோஷத்துடன் செயற்படும் பேரின, அடிப்படை வாதிகளுக்கு சூடேற்றுவது போன்று இல்லையா தவிசாளரே.

ஹக்கீம் மு.காவின் தலைவராக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? அவரை விட்டால் வேறு யார் இருக்கின்றார்.முஸ்லிம் சமூகத்தை மலினப்படுத்தக் கூடிய ஒரே ஒரு ஜீவன் ஹக்கீம் மட்டும்தான் என்பதை முஸ்லிம் சமூகம் அறியும்.இருந்தாலும் கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் சமூகத்துக்கு உண்டு.

உங்களைப் போன்று முரண்பாடுகளும், விதண்டாவாதம் புரியும் நண்பர்கள் இல்லாமற் போயிருந்தால் என்றைக்கோ ஹஸனலி போன்ற கட்சியின் தீவிர விசுவாசிகள் தலைவராகியிருப்பர்கள்.

மு.காவைப் பொறுத்தமட்டில் தவிசாளர் பதவி ஒரு வில்லன் பதவி,அப்துல் றசூல் பாறுக்,சேகு இஸ்ஸடீன்,அதாஉல்லா,பஷீர் என இன்றுவரைக்கும் முரணான பதவியாகத்தான் இது இருக்கிறது.

துவிசாளர் பஷீர் அவர்களே. உங்களின் காட்டிக் கொடுப்புக்களால் ஏதெனும் ஆகிவிட மாட்டாது.தயவு செய்து பேரினவாதிகள்,அடிப்படைவாதிகளிடம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

பொதுத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள் கிழக்குத் தவிர்ந்த எங்கு போட்டியிடாலும் ஹக்கீம் மண் கௌவக் கூடிய வாய்ப்புத்தான் இருக்கின்றது.கண்டியில் போட்டியிட்டாலும் ஆஸாத் சாலியைக் கூட இவர் முந்தமாட்டார். கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவு காலத்தின் கண்ணாடி,சொந்த மண்ணில் வெற்றி பெறாதவர்கள் தலைவராக முடியாது.காலம் பதில் சொல்லும்.அவரது முல்லா போன்ற உறவுகள் கூட மக்களால் புறக்கணிக்ப்பட்டவர்கள்தான்.

இதை நாடறியும்.முல்லாக்களெல்லாம் கிழக்கிலிருந்து வருபவர்களையெல்லாம் செல்லாக் காசிகளாக மதிப்பவர்கள்.
இன்ஷா அல்லாஹ் தலைவர் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் தயாராகி வருகிறது.

20பதுக்கு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.
ஆகவே பஷீர் அவர்களே அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம் விரோதப் போக்கை நீங்கள் கைப்பிடிப்பது.தெரிந்திருந்தும் கட்சியின் பிரச்சார யுக்திக்கு நீங்கள் நல்ல பணியாற்றியுள்ளீர்கள் என்பதனால் சமூகத்துக்கு மத்தியில் உங்களுக்கு கொஞ்சம் மரியாதையுண்டு.

ஹக்கீம் பலஹீனமானவராக இருந்ததனாற் தானே நீங்கள் மூன்று தடவை ஓசியில் தே.பட்டியலில் போனீர்கள்.கட்சிக்கு துரோகம் செய்ய உங்களுக்கு மனசு வருகின்றதா?

தேவையில்லாத உங்கள் கோரிக்கையினால் இங்கு ஒரு பர்மிய ராச்சியத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று நட்புடன் கேட்கிறேன். நான் உங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு நீங்கள் இல்லை.மு.காவின் அன்ரன் என்று யாரு சொன்னாலும் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.அதற்கு மேலாக நீங்கள் ஒரு மாஓ,நெப்போலியன்,ஹிட்லர்,மகா அலேக்ஸ்ஸாண்டர் இவர்களின் கூட்டுச் சேர்க்கைதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -