சமிக்ஞையை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த லொறி மீது அரந்தலாவ பொலிஸ் சோதனைச் சாவடி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் இன்று (23) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

லொறியில் மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மங்களகம பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தியுள்ளனர். 

லொறி நிறுத்தாது பயணித்ததால் அரந்தலாவ பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அறிவித்துள்ளனர். அரந்தலாவ பொலிஸார் லொறியை நிறுத்தி போதும் லொறி நிறுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

அதன்போது ஒருவர் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

லொறியில் பயணித்த ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் லொறியை மீட்கும் போது அதில் மாடுகள் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -