வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மீது சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்பவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற வேளையே இவர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
