காத்தான்குடி கடற்கரை வீதியினால் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் மக்களின் பிரதான பயன்பாட்டிலுள்ள வீதியின் அவல நிலையே இச்செய்தி.

கடந்த அரசாங்கத்தினால் இந்நகரத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ்வீதியை அரசாங்கமும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது காத்தான்குடி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நகர மக்கள் மீன்பிடி தொழிலுக்கும், பொழுதுபோக்குக்கும் மிகப்பிரதானமாக இக்கடற்கரை கானப்படுவதால் இவ் வீதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. 

இவ் வீதியில் குன்றும், குழிகளும் அதிகமாக காணப்படுவதாலும் வீதியின் சிதைவுகளாலும் இவ் வீதியினால் பயணிப்பது மக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதுடன் வீதி விபத்துக்களால் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர் .

இம்மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ் வீதியினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை பெற்றுத்தருமாறு மாலை எக்ஸ்பிரஸ் இடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

ஜுனைட் .எம். பஹ்த் 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -