தெமட்டக்கொடையில் மெளலவிமார்களுக்கு அரபுப் பாடம் எவ்வாறு கற்பித்தல் பற்றிய கருத்தரங்கு!

அஸ்ரப் ஏ சமத்-

தெமட்டக்கொடையில் உள்ள உலக கலாச்சார மத்திய நிலையமும் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தினாலும் நாட்டின் பல பாகத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மெளலவிமார்களுக்கு 'அனைவருக்கும அரபுப் பாடம் எவ்வாறு கற்பித்தல்' அதன் முறைகள் பற்றிய 5 நாள் வதிவிடக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந் நிகழ்வு மெளலவி லத்தீப் நவ்பர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சவுதி அரேபியாவின் காலித் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி சாலிஹ் அல் சக்ரஹ் மற்றும் இமாம் பல்கழைக்கத்தினைச் சேர்ந்த அப்துல்லாஹ் அகியோர் இப் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நடாத்தினர்.

இன்று பாடநெறிககை பூர்த்தி செய்த பல்கழைக்கழகங்களில் அரபு பட்டம் பெற்ற 30 ஆசிரியர்கள் மெளலவிமார்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பிணர் முத்தலிபா பாருக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் ஜம்மியத்துல் உலாம சபையின் செயலாளர் அஷ்ஷேய்க் முபாரக் மெளலவி உப தலைவர் கலீல் மெளலவி, விடிவெள்ளி ஆசிரியர் எம். பைருஸூம் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -