பாராளுமன்றை கலைப்பது தொடர்பில் இன்றைய சபை அமர்பில் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து நாடாளுமன்றம் இந்த மாதம் 9ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் அளித்ததை தொடர்ந்து சபையில் அமளி ஏற்பட்டுள்ளது.
இன்றைய அமர்வில் விவாதிக்கப்படவிருந்த அரசியலமைப்பு சபை குறித்த பிரதான விடயங்களை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிப்பதாக, பிரதமர் ரணில்விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் தாகும் இணக்கம் கண்டிருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.
இன்றைய அமர்வில் விவாதிக்கப்படவிருந்த அரசியலமைப்பு சபை குறித்த பிரதான விடயங்களை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிப்பதாக, பிரதமர் ரணில்விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் தாகும் இணக்கம் கண்டிருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.
அரசியலமைப்பு சபையில் குடியியல் பிரதிநிதிகளின் பெயர்களை உறுதி செய்துக் கொள்வதற்காகவே இன்றைய தினம் விசேடமாக நாடாளுமன்ற அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மொழி வினாக்களின் பின்னர், மீண்டும் கட்சித் தலைவர்கள் கூடி, இது குறித்து தீர்மானிப்பதாக இணங்கப்பட்டிருந்தது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன குறித்த தீர்மானத்தை மீண்டும் அறிவுறுத்திய நிலையில், சபாநாயகரால் சபை சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் போதும் இணக்கப்பாடொன்று ஏற்படாத நிலையில், மதிய போசனையின் பின்னர் கட்சித் தலைவர்களின் சந்திப்பை நடத்த தீhமானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் ஒரு மணி அளவில் மீண்டும் சபை கூடி இருந்த போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில், அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது அரசியல் அமைப்பு சபையின் குடியியல் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போது சபையில் உரையாற்றிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சபையில் இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாயின், தேர்தலுக்குச் செல்ல விரும்புவதாயின் பாராளுமன்றை கலைக்குமாறு தானும் யோசனை முன்வைப்பதாக தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். ச
