நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவின் பேச்சிலிருந்து வெளியான மூன்று உண்மைகள்!

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - 

1.'காத்தான்குடி பிரதான வீதி அபிவிருத்தியின்போது நான் எதிர்நோக்கிய சவால்கள் ஏராளம். முன்னாள் நகர பிதா முபீன், பிரதான வீதி அபிவிருத்திக்குத் தடையாக இருந்தபோது நான் அவரை எனது அறைக்கு அழைத்து வீதி அபிவிருத்திக்கான சம்மதக்கடிதம் தராவிட்டால் உடம்பில் கழுத்திருக்காது என்று பயமுறுத்தி அச்சுறுத்தியதன் காரணமாகவே அவர் பிரதான வீதி அபிவிருத்திக்கான அனுமதிக் கடித்தத்தைத் தந்தார்.'

2. 'பிரதான வீதியில் நாட்டப்பட்ட ஈச்சை மரங்களைப் பிடுங்கி எறிந்து குர்ஆன் சுற்றுவட்டத்தை உடைத்தெறிவதற்கு நமதூர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு வைத்து கட்டளையும் எடுத்திருந்தார்கள். நீதிமன்றத்தில் அவ்வாறு கட்டளை வழங்கிய நீதிபதியை யாராலும் மாற்ற முடியுமா? நான் அந்த நீதிபதியையே மாற்றினேன். 

நமக்கு எதிராகக் கட்டளையிட்ட நீதிபதியை மாற்றி விட்டு, நமக்குச் சாதகமாக கட்டளை எழுதக்கூடிய நீதிபதியைக் கொண்டு வந்து எழுது கட்டளை என எழுத வைத்துத்தான் இந்த பிரதான வீதி அபிவிருத்திகளைச் செய்தேன்.'

3. 'மஹிந்த அரசாங்கத்தில் கடைசியாக நான் பெற்ற வீதி அபிவிருத்திக்கான நிதி 106 மில்லியன் ரூபா. புதிய காத்தான்குடியிலுள்ள பாம் வீதி, கர்பலா வீதி, மீன்பிடி இலாகா வீதி, பூநொச்சிமுனை ஹிஸ்புல்லா வீதி ஆகிய நான்கு வீதிகளையும் புனரமைப்பதற்கான இந்த நிதியை கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கொந்தராத்துக்காரர் ஷிப்லி பாறூக் அவருடைய கல்முனை கொந்தராத்துக் கம்பனி மூலம் பெற்று அபிவிருத்தி செய்வதற்குப் பொறுப்பேற்றிருந்தார்.'

'ஏழு மாதங்களாகியும் அந்த வீதிகளை அபிவிருத்தி செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். அவரை சம்மேளனத்திற்கு அழைத்து உடனடியாக இந்த நான்கு வீதிகளின் வேலைகளையும செய்ய வேண்டும் எனக் கூறியபோது, புதிய அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டது. அமைச்சர் கபீர் ஹாசீம் வேலைகளை நிறுத்தியுள்ளார் என்று சொன்னார். 

நான் உடனடியாக அமைச்சர் கபீர் ஹாசீமைத் தொடர்பு கொண்டு அந்த வீதிகளின் வேலைகளை ஆரம்பிப்பதற்கான கடிதத்தைப் பெற்றுக் கொடுத்தேன். அதன் பிறகும் அவர் வேலைகளைச் செய்யவில்லை.'

'இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த நான்கு வீதிகளையும் கொந்தராத்துக்காரர் ஷிப்லி பாறூக் செய்யாமல் விட்டால் நான் பெற்றுக் கொடுத்த 106 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்குத் திரும்பிச் சென்று விடும். 

அப்படி நடப்பதற்கு முன்னால் இந்த ஊர் மக்கள், சம்மேளனம் எல்லோரும் ஒன்றிணைந்து கொந்தராத்துக்காரர் ஷிப்லி பாறூக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அவரை வீதியில் இறங்கி ஊரில் நடமாட விடக்கூடாது. நீ பெரிய தாடியை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றக்கூடாது. உன்னால் செய்ய முடியாவிட்டால் நீ கடிதம் ஒன்றையாவது எழுதித்தா. நான் வேறு கொந்தராத்துக்காரரை வைத்துச் செய்து கொள்ளுகிறேன்.'

இவை, கடந்த 15ம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற ஐம்பெரும் எழுச்சி விழாவில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பகிரங்கமாகப் பேசியவையாகும். அவரது இப்பேச்சுக்களின் மூலம்...

1. முன்னாள் நகர சபை உறுப்பினரும், தற்போதைய அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீனுக்கு அவர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

2. நீதித்துறைக்குள் அவரது அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகப் -படுத்தியதை அப்பட்டமாக இன்று ஒப்புக் கொண்டிருக்கின்றார்.

3. மாபெரும் 'தக்வாதாரி' (இறையச்சமுடையவர்) என காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தானே அறிமுகப்படுத்தி மக்களின் வாக்குகளையும் அளிக்குமாறு கூறிய சகோதரர் ஹிஸ்புல்லாவே, இன்று அவரை விழித்து 'நீண்ட தாடியை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றுபவர்' என்றும், ' அவரை ஊரில் இறங்கி நடமாட விடாமல் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்' என்றும் கூறியிருக்கின்றார். 

ஏதிர்காலத்தில் இன்னும் என்னென்ன புலம்பல்கள் எல்லாம் அவரது வாயால் இந்த ஊர் மக்களுக்கு 'அருள்வாக்காக' கிடைக்கவுள்ளனவோ..?றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -