நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்தி வைப்பு…!

டந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக நடிகை குயிலி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த மார்ச் மாதம் 25–ஆந்தேதி பிரசாரம் செய்தார்.

ஆனால் அவர் புதிய பஸ் நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு நகரம் முழுவதும் பிரசாரம் செய்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நடிகை குயிலி, வீடு கட்டும் சங்க தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நடிகை குயிலி உள்பட 2 பேரும் ஆஜராகாததால் வழக்கை ஜூலை 6–ந்தேதிக்கு நீதிபதி சிவா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -