பேப்பரில் செல்போன்…!

மெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல். இவர் பேப்பரில் செல்போன் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த செல்போன் 3 கிரீடிட் கார்டு அளவு பருமன் ஆனது. இது மீண்டும் அழித்து விட்டு தயாரிக்க கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போனில் ஒருவர் மறுமுனையில் இருந்து பேசுவதை கேட்க மட்டுமே முடியும். பதிலுக்கு டயல் செய்து பேச முடியாது. இதை 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே பேச முடியும்.

அதன்பின்னர் அதை அப்படியே வீசி எறிந்து விட முடியும். அதன் பின்னர் அதில் பேச முடியாது. அந்த செல்போன் மிகவும் மெலிதாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு அதை இழுத்து கொள்ள முடியும்.

அதன்விலை ரூ.1,300 மட்டுமே. பேசி முடித்ததும் குப்பை கூடையில் வீசாமல் கடையில் திருப்பி கொடுத்தால் ரூ.150 முதல் ரூ.200 வரை திரும்ப வழங்கப்படுகிறது.

அது 2 முதல் 3 இஞ்ச் நீளம் வரை உள்ளது. அதன் தயாரிப்பு தொழில் நுட்பத்தை அல்ட்ஸ்சல் நியூஜெர்சியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். அதற்கான கண்டுபிடிப்பு உரிமை (பேடண்ட்) கோரியுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -